Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக கனிமொழி மீது அதிமுக புகார் !!

Currently online
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னை ஆரத்தி எடுப்பவர்களுக்கு கனிமொழி பணத்தை வாரி இரைப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

திமுகவின் தூத்துக்குடி வேட்பாளரான கனிமொழியும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்களை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. 

அதில், திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது குற்றமாகும் எனவும், இது விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்ட கனிமொழியின் நாடாளுமன்ற வேட்புமனுவை நிராகரிக்க அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.