Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 12, 2019

ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா? அப்ப இது உங்களுக்குத்தான் !!

Currently online
ஆரோக்கியமான உடலுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். அப்போதுதான் உடல் உறுப்புகள் அதற்குறிய வேலைகளை சரியாக செய்து உடலை பராமரிக்கும். இல்லையேல் எதிர்விளைவுகளை உண்டாக்கி நோய்களை ஏற்படுத்தும். 'இன்சோம்னியா' என்கிற தூக்கமின்மை நோயாலும் பலர் அவதிப்படுகின்றனர். அவர்கள் தூக்க மருந்துகளை சாப்பிட்டு தூங்குகின்றனர். ஆனால் அது உடலுக்கு நன்மை இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வீட்டிலேயே சில செயல்களைச் செய்வதால் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும். எவ்வாறு என்பதைக் காணலாம்.

நாள் முழுவதும் உழைத்த களைப்பால் உடல் அசதி ஏற்படும். அப்போது உடல் வலிக்கு சூடான நீரில் ஒரு குளியலைப் போட்டால் உடல் வலி நீங்கும். அதேபோல் அது தூக்கத்தையும் தூண்டும். எனவே, தூங்கப் போகும் முன் 2 மணி நேரத்திற்கு முன் நல்ல சூடான நீரில் குளித்துபாருங்கள். ஆழ்ந்த தூக்கம் உங்களை அறியாமல் வரும்.

உடல் வலி நீங்க மசாஜ் செய்யுங்கள்: மசாஜ் செய்வதால் உடலும் மனதும் அமைதியைப் பெறும். குறிப்பாக இரவில் மசாஜ் செய்வதால் உடல் சோர்வுகள் முற்றிலும் நீங்கி தூக்கத்தைத் தூண்டும். மனம் சிந்தனை ஓட்டங்களால் அவதிப்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்தி அமைதி நிலைக்கு அழைத்துச் செல்லும். இதனால் ஆழ்ந்த தூக்கமும் உறுதி. இதற்காக தினமும் மசாஜ் செண்டர் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் நீங்களே நல்ல வாசனை எண்ணெய் பயன்படுத்து மசாஜ் செய்யலாம்.

லாவண்டர் எண்ணெயை நுகருங்கள்: லாவண்டர் எண்ணெய்க்கு தூக்கத்தைத் தூண்டும் ஆற்றல் உண்டு. இது உங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளையும் பாசிடிவாக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். தூங்கும் முன் உங்கள் கைகளில் அல்லது படுக்கை அறையில் வாசனைக்காகப் பயன்படுத்தினாலும் அதை நுகர்வதால் தூக்கம் தானாக வரும். பின் உங்களை எழுப்ப 10 பேர் வேண்டும்.

சூடான பாலுடன் தேன் கலந்து அருந்துங்கள்: தூங்குவதற்கு முன் சூடான பாலில் தேன் கலந்து அருந்துங்கள். இவ்வாறு இரண்டையும் சேர்த்து அருந்துவதால் தூக்கத்தைத் தூண்டும். பாலில் அமினோ ஆசிட் டிரைப்டோஃபான் இருப்பதால் தூக்கத்திற்கான ஹார்மோன்களைத் தூண்டும் வல்லமை உண்டு.

ஹெர்பல் டீ அருந்துங்கள்: ஹெர்பல் டீ அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி பெறும். மனம் அமைதி நிலையை அடையும். அப்போது உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத தூக்கம் வரும்.

மெக்னீசியம் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்: மெக்னீசியத்தால் பல உடல் நன்மைகள் கிடைக்கின்றன. இது தசை வலிகளை நீக்கி இலகுவாக்குகிறது. அதேபோல் ஆராய்ச்சியில் ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுப்பதாகக் கண்டறிந்துள்ளனர். எனவே மெக்னீசியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது மெக்னீசியம் பவுடரை வாங்கி உங்கள் குளியல் நீரில் கலந்து குளியுங்கள்.

தூங்கும் முன் தவிர்க்க வேண்டியவை: காஃபி, ஆல்கஹா, சிகிரெட் இவற்றை தூங்கும் முன் எடுத்துக் கொள்ளாதீர்கள். அதேபோல் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் உண்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரவில் கட்டாயம் அளவான உணவை உண்ணுங்கள். லாப்டாப், டி.வி, செல்ஃபோன் போன்ற எந்த கேட்ஜெட்டுகளையும் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிருங்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.