Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

யானை தாக்கியதில் சிறுவன் பரிதாப பலி !!

Currently online
துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவனை யானை தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் வவுனியா வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.

இதில் ஷாமோட் (15) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்று விட்டு தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை யானை தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவனின் கூக்குரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் உடனடியாக ஹெப்பற்றிகொலாவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.